பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸின் மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கமில்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கிளாரன்ஸ் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது கணவரும் இளவரசருமான சார்ல்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவர் தாம் பங்கேற்விருந்த நிகழ்ச்சியை இரத்து செய்தார்.