அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு போட்டி தொகையில் 20 வீதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது.
அத்துடன் சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்கு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிகெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.