களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு 12 நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
டீசல் வழங்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் என்ட்ரூ நவமணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்திலும் மேலும் 2 நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,விரைவில் மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும், மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை வரலாம் என, எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.