சுகாதார ஊழியர்களின் ஆர்பாட்டப் பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தற்போது ஒருவழிப் போக்குவரத்து நடவடிக்கை மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, காலிமுகத்திடல் பாதையில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.