இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர, லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால், 2 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முன்னதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஏலத்தில், ஒரு கோடி இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலங்கையில் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.