follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுஎதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல

எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை அல்லது அளவு ஒரு பொருட்டல்ல

Published on

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்களுடனான முதலாவது மாநாடு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று (11) இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சமயம், நாட்டின் அபிவிருத்திப் பணிகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, சுமார் இரண்டு வருடக் காலமாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொடுத்து, தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் தொடர்பில், பெரும்பாலான மக்கள் நேர்மறைச் சிந்தனையுடனேயே காணப்படுகின்றனர். அதனால், குறுகிய அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களைப் புறக்கணிப்பதாக, அங்கு கூடியிருந்தவர்கள் குறிப்பிட்டனர். முழு உலகமும் பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், இலங்கையானது படிப்படியாக முன்னோக்கி நகர்ந்து வருகின்றது என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி நகர்வதற்கான தேவையை எடுத்துரைத்த நிபுணர்கள், அதற்காகப் பிரவேசிக்கும் போது எதிர்கொள்ளும் தடைகளைத் தகர்த்தெறிய, அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

கல்வி, கொள்கைகள், சமூக விஞ்ஞானம், விவசாயம், ஆராய்ச்சி, நீர் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்கள், மருத்துவப் பொறியியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பலரும், ஜனாதிபதி தலைமையிலான இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...