அண்மையில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் ஜீப் வாகனத்தின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய குறித்த வாகனத்தின் சாரதி வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு 200,000. ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது
மின்னேரிய தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையை அடுத்து கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.