ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஓய்வூதிய நிதிக்கு 25 வீத மிகை வரி விதிக்கப்படவுள்ளமை தொடர்பில் பல தரப்பினரிடமிருந்து தொழிலாளர் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் திறைசேரிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.