எதிர்கட்சியினர் தேர்தலை நடத்தக்கோரினால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமும் தயாராக உள்ளது. உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் அதற்கு எதிர்கட்சிகள் தயாராக இருங்கள் என ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார மாகாணசபை தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.