நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சும் இலங்கை வாசனைப் பொருள் சந்தைப்படுத்தல் சபையும் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 165 ரூபாய். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் மூலமாக மஞ்சள்ப்பொடி மற்றும் உலர் மஞ்சள் தயாரிக்கப்பட்டு மசாலா சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அரச அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.