தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தில் தென்னை அபிவிருத்தி சபையின் வாகனமும் சாரதியும் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.