டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைய முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலகம் அடக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.