உலகில் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் காரணமாக கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மில்லியன் கணக்கில் பெறப்பட்ட சோதனை உபகரணங்கள் இப்போது குறைந்து செல்வதாக டாக்டர் ஹேரத் வலியுறுத்துகிறார்.
எவ்வாறாயினும், தற்போது நாட்டில் சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருப்பதாகவும், அனைவரையும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.