follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதொடர் பணிப்புறக்கணிப்பில் இராமேஸ்வரம் மீனவர்கள்!

தொடர் பணிப்புறக்கணிப்பில் இராமேஸ்வரம் மீனவர்கள்!

Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களையும்,  படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில், இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 800 க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 10 கோடி ரூபா வருமானம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 11 ஆம் திகதி இராமேஸ்வரம் ரயில் நிலைய வளாகத்தில் மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...