follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுமருந்துக்கு தட்டுப்பாடு - அதிகரிக்கும் நோயாளிகளின் உயிரிழப்பு!

மருந்துக்கு தட்டுப்பாடு – அதிகரிக்கும் நோயாளிகளின் உயிரிழப்பு!

Published on

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி, உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்கிறார்கள்.

மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360...

வருமான வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம்...

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை...