அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என
அணித்தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
எனவே, விக்கெட் காப்பாளர் பணிகளை தினேஷ் சந்திமால் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக இலங்கை குழாமில் பெயரிடப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்ன இலங்கையில் வைத்து கொவிட் தொற்றுக்குள்ளானார்.
இந்நிலையில், தற்போது குணமடைந்துள்ள அவர் இன்றிரவு அணியில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
05 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 3ஆம் திகதி அவுஸ்திரேலியா பயணமானது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.