follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிசைப்படகுகளை ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

விசைப்படகுகளை ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

Published on

இலங்கையிடம் உள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை வெளிநாட்டு மீன்பிடிதடை சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் அரசுடமையாக்கி யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை,காரை நகர்,கிளாஞ்சி, மயிலட்டி, மற்றும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் படகுகளை ஏலம் விட கடந்த 2020ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்ட்டுள்ள நல்ல நிலையில் உள்ள படகுகளை மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும்மாறு கேட்டு கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தமிழக மீனவர்களால் இலங்கை சென்று படகுகளை மீட்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனடியாக ஏலம் விட்டு அந்த பணத்தை உரிமையாளர்களிடம்  ஒப்படைக்க ஊர்காவற்றுறை நீதவான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை கடற்படை தடுத்து வைக்கப்பட்டுள்ள பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விசைப்படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.

இதனையடுத்து நேற்று முதல் வரும் 10ஆம் திகதி வரை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை ஏலம் விடப்போவதாக கடந்த மாதம் இலங்கை மீன் வளத்துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக மீனவர்கள் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு நேற்று காலை முதல் மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகளை ஏலம் விட்டு வருகிறது.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிடாத பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளையும், இலங்கை அரசையும் கண்டித்து கேஷங்களை எழுப்பினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...