தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக காணப்பட்ட இந்த பொருளாதார பிரச்சினை எதிர்வரும் 5 ஆண்டுகளில் பாரியளவில் வெளிப்படவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே வெளிப்பட்டு விட்டது.
வருடமொன்றில் ஏற்றுமதி வருமானத்திற்கும், இறக்குமதி செலவீனத்திற்கும் இடையில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியுள்ளது.
எனவே, இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு கடன் பெறுவதால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.