கனிய எண்ணெய் கொள்வனவிற்கான இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகியகால கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்த்லே ஆகியோருடன் பங்கேற்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்தியா அரசாங்கம் சார்பில், இந்தியன் எக்ஸின் வங்கியில் பிரதான பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரி ஆகியோர் கைச்சாதிட்டுள்ளனர்.