follow the truth

follow the truth

April, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇலங்கையில் முட்டைக்கு சூட்டப்பட்ட பட்டப்பெயர்

இலங்கையில் முட்டைக்கு சூட்டப்பட்ட பட்டப்பெயர்

Published on

சமூக வலைத்தள பயனர்கள் கோழி முட்டைக்கு புதிய பட்டப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என்றே இவர்கள் முட்டைக்கு பட்டப்பெயரை சூட்டியுள்ளனர்.

“அவன்கார்ட் கனரக ஆயுதம்” தாருங்கள் என சிலர் கடைகளில் கேட்கும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. “ முதலாளி 10 அவன்கார்ட் கனரக ஆயுதங்களை தாருங்கள்” என சிங்களத்தில் எழுதப்பட்ட புகைப்பட பதிவுளை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையே முட்டைக்கு இப்படியான பட்டப்பெயரை சமூக வலைத்தள பயனாளிகள் சூட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்த வந்த இரண்டு பேரை மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் பிடித்தனர். அவர்கள் தாம் அவன்கார்ட் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுவதாக கூறியிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான நபராக கருதப்படும் நிஷ்சங்க சேனாதிபதியே அவன்கார்ட் ( Avant Garde) நிறுவனத்தின் உரிமையாளராவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு களமிறக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு குழு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க...

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின்...

ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க வேண்டும் – சஞ்சீவ

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச தலைவர் என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின்...