அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது.
குறித்த போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரும் இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.