follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவணிகம்இலங்கையில் அதிகூடிய இணைய வேக சாதனையை படைத்துள்ள எயார்டெல், 5G பரிசோதனையை ஆரம்பிக்கிறது

இலங்கையில் அதிகூடிய இணைய வேக சாதனையை படைத்துள்ள எயார்டெல், 5G பரிசோதனையை ஆரம்பிக்கிறது

Published on

எயார்டெல் லங்கா வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G சோதனைகளை மேற்கொள்கிறது, இது நாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகூடிய இணையத்தள வேகத்தை பதிவு செய்துள்ளதோடு, எயார்டெல் லங்கா 1.9 Gbpsக்கும் அதிகமான வேகத்தில் 5Gக்கான அதன் தயார்நிலையில் இருப்பதை அறிவித்துள்ளது.

“இலங்கையானது முன்னோடி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு சந்தையாக இருப்பது மற்றும் எமது 5G திறன்களை அதிகரிப்பதற்கு இன்று நாம் செய்யும் முதலீடுகள் இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான டிஜிட்டல் அடித்தளத்தை அமைக்கும்.

இன்று அதற்கு சாட்சியாக, நாட்டிலேயே அதிக இணையத்தள வேகத்தை பதிவு செய்ய முடிந்தது, மேலும் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது சாதனைகளை முறியடிப்போம்.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

“எங்கள் அதிவேக நெட்வொர்க் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த நெட்வொர்க்கை வழங்குவதற்கான எங்கள் உட்பார்வைக்கு ஏற்ப உள்ளது.

எயார்டெல்லில் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த தருணமாகும்.” என்று அவர் மேலும் கூறினார்.

எயார்டெல் 5G ஆனது தற்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிவேகம், 10 மடங்கு குறைவான தாமதத்திறன் மற்றும் 100 மடங்கு பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டது.

எயார்டெல் உலகின் புத்தாக்கமான மொபைல் மற்றும் நெட்வொர்க் கண்டுபிடிப்பாளர்களில் ஒன்றாக இருப்பதுடன், நெட்வொர்க் மேம்படுத்தல்களில் நிறுவனத்தின் கணிசமான முதலீடு காரணமாக 5G பரிசோதனைகளை ஆரம்பிக்கும்.

எயார்டெல் அதன் உலகத் தரம் வாய்ந்த 4G உட்கட்டமைப்பு நாடு முழுவதிலும் 5G தயாராக இருப்பதாக அறிவித்தது, இதனால் அடுத்த தலைமுறைக்கான வலையமைப்பிற்கு தடையற்ற மாற்றத்தை எளிதாக்குகிறது.

3500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில், தற்போதுள்ள தாராளமயமாக்கப்பட்ட ஒலி அலைக்கற்றையை (Spectrum) NSA (Non Stand Alone) நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் மூலம் எயார்டெல்லுக்கு இதை செய்ய முடிந்தது.

இந்த புரட்சியானது அனைத்து களங்களிலும் எயார்டெல் நெட்வொர்க்கின் 5G தயார்நிலையை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும்.

தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...

உச்சம் தொடும் தங்க விலைகள்

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235...