காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன். நாட்டைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.