follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசர்ச்சையான ஹபாயா! ஆசிரியைக்கு நீதி கிடைக்குமா? (VIDEO)

சர்ச்சையான ஹபாயா! ஆசிரியைக்கு நீதி கிடைக்குமா? (VIDEO)

Published on

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் மற்றும் பெண் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில் ஹபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில் அப்பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமையை பொறுப்பேற்க சென்ற நிலையில் பாடசாலை சமூகத்திற்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹபாயா அணிந்து வந்தமையால் கோபம் கொண்ட அதிபர் தன்னை தாக்கியதாகவும் கூறி இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியர் மீது தாக்குதல் முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் எமது செய்திப் பிரிவினர் பாடசாலை சமூகத்தினரை தொடர்பு கொண்டபோதும் இதுதொடர்பான மேலதிக தகவல்களை பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹபாய அணிவது தொடர்பில் எழுந்த சர்ச்சையும் பின்னணியும்

கடந்த 2017ல் அபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை அபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு சண்முக கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள சண்முக இந்து கல்லூரிக்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முகவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முக இந்து கல்லூரிக்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது. அதன் பிரகாரம் இன்று சிறி சண்முகாவிற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினர்.

கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்துள்ளதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறிக்க முயன்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்தார்.

இதற்கிடையில், அபாயா அணிந்து வரவண்டாம் என்று கூறியும், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் என்று தெரிவித்தும் திருகோணமலை சண்முக இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைப்பு ஒன்று :

 

\திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியை ஒருவர் அபாயா குறித்த `கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியையின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு இப்பாடசாலையில் அபாயா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், அப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றி வந்த ஆசிரியை மீண்டும் பாடசாலைக்கு இன்று (02) சென்றுள்ளார்.

இந்நிலையில் ,குறித்த பாடசாலை அதிபர் காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்க சென்ற நிலையில், பாடசாலை நிர்வாகத்துக்கும் குறித்த பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் தன்னை தாக்கியதாகவும், அபாயா அணிந்து வந்த ஆசிரியையும், அதிபரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்கென சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் மாணவிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...