follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் - பொலிஸ்

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் – பொலிஸ்

Published on

பாணந்துறை ஆதார மருத்துவனைக்கு முன்பாக அம்பியூலன்ஸ் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த இருவரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு பொலிஸ் ஊடகப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு சந்தேக நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட இலக்கங்களை வழங்கியுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண குற்றப் பிரிவு – 071-8592686
பணிப்பாளர், களுத்துறை குற்றப் பிரிவு – 071-8592745

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...