கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் போது, இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சார்த்திகள், தமது பரீட்சை நிலைய கண்காணிப்பு ஆசிரியர்களின் ஊடாக, தமது கை கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், அது குறித்து அறிந்துக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1911 என்ற இலக்கத்திற்கு அல்லது 011 2784208 அல்லது 011 2 784 537 ஆகிய இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.