follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகரண்ணாகொடவின் மனு ஏப்ரல் 6 விசாரணைக்கு!

கரண்ணாகொடவின் மனு ஏப்ரல் 6 விசாரணைக்கு!

Published on

கொழும்பை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தம்மை பெயரிட்டமைக்கு எதிராக, வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அறிவித்து அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்தது.

தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டும் மனுதாரர் மேலும் அதனை ரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...