follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉள்நாடுராஜகிரிய போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு

ராஜகிரிய போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு

Published on

எத்துல்கோட்டை அங்கம்பிடிய வீதி மற்றும் நாவல ராஜகிரிய வீதியை இணைத்து ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் 60 வீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிர்மாணிப் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை நிறைவு செய்யுமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை வழங்கியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முழு மேற்பார்வையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புக் கூட்டுத்தாபனத்தினால் இரு வழிப்பாதையுடன் கூடிய இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

600 மீற்றர் நீளமும் 10.4 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் புதிய பாலத்திற்கு ரூ.1,698.55 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவில் இரண்டு நடைபாதைகள் அமைக்கப்படும். மேலும் அங்கம்பிட்டியில் இருந்து பாலம் நோக்கி 60 மீற்றர் நீள பிரவேச வீதியும், பாலத்தில் இருந்து பாடசாலைக்கான பாதை வரை 40 மீற்றர் நீள பிரவேச வீதியும் அமைக்கப்படும்.

இந்த புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாராளுமன்ற வீதி மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நாவலை நோக்கி இலகுவாக செல்லக்கூடியதாக இருப்பதுடன் ராஜகிரிய வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...