சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி ஒரு கிலோ நேற்று(29) முதல் 128 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நேற்று கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளை ஆய்வு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
.