கிளிநொச்சி நகரத்தை அண்மித்த பகுதியில் வசித்து வந்த 15 வயதான சிறுமி ஒருவர், கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதும் குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.