பாகிஸ்தான் முன்னாள் சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் எதிர்மறையான RT-PCR சோதனை முடிந்ததும் அவர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் மீண்டும் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.