பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் நீதிவான் முன்னிலையில் 2 மணிநேர இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றல் அவர் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட போது இவ்வாறு இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகநபர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.