கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகபட்சத்தை அண்மித்துள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க குறிப்பிட்டார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒட்சிசன் தேவைப்பாடு காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த 06 நாட்களில் நாளாந்தம் 800 இற்கும் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.