follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

தேசிய கட்டமைப்புடன் தனியார் மின்பிறப்பாக்கிகளை இணைக்க திட்டம்

Published on

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்பிறப்பாக்கிகள் குறித்த நிறுவனங்களிடம் உள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரிலுள்ள 10 இடங்களில் மாத்திரம் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் மின்சார நெருக்கடி, வழமைக்கு திரும்பும் வரை குறித்த மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...