follow the truth

follow the truth

January, 7, 2025
Homeஉள்நாடுஹோமாகம மருத்துவமனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஹோமாகம மருத்துவமனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜனித் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, 3 மருத்துவர்கள், பதினொரு தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழாமைச் சேர்ந்த ஒன்பது பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் இரண்டு சிகிச்சை அறைகளில் 75 படுக்கைகளே உள்ளன, எனினும், தற்போது 81 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர்...

TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின்...

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல தீர்மானம் 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின்...