follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுஇளைஞர் கடத்தப்பட்ட சம்பவம்: ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு விசாரணைக்கு

இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம்: ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு விசாரணைக்கு

Published on

இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த தினத்தில் முறைப்பாட்டாளரின் முதலாவது சாட்சியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015 டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பகுதியில் வைத்து, ஹிருணிகாவின் மெய்ப் பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் வைத்து இளைஞரை கடத்தினர்.

இதனை அடுத்து மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...