சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித பின்புலமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தையில் சீனி 150 ரூபாவிற்கு விற்கப்படுவது குறித்து டெய்லி சிலோன் ஊடகவியலாளர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக சீனி இறக்குமதி செய்தவர்கள் தற்போது அவற்றைப் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இதுகுறித்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.