2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.