follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

புலமைப்பரிசில் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

Published on

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல், பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல், குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல், பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குதல் அதுபோன்ற மாதிரி வினாக்களை வழங்குதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...