ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டடம் இன்று இடம்பெறவுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறவுள்ள இரண்டு நாள் விவாதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு கோரிய போதும் அதற்கான அனுமதி கிடைக்க பெறவில்லை.
எனவே விவாதத்திற்கான நேரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.