follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1டொங்காவை தாக்கிய சுனாமி!

டொங்காவை தாக்கிய சுனாமி!

Published on

பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்தது.

இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலையில் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டது மற்றும் தெற்கில் உள்ள அமாமி தீவுகளில் மூன்று மீட்டர் (9.84 அடி) உயர அலைகள் தாக்கக்கூடும் என்று கூறியது. முன்னதாக அங்கு ஒரு மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கின.

எனினும் இதனால் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒலிபரப்பான NHK தெரிவித்தது.

சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் டொங்காவின் தலைநகரமும் கடுமையான சுனாமி அலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்தது. கடலோர சாலைகளில் அலைகள் பாய்ந்து, சொத்துக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...