follow the truth

follow the truth

December, 25, 2024
Homeஉலகம்வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தல்

Published on

வட கொரியா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா முன்னெடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆறு நீண்டதூர ஏவுகணைகளை வட கொரியா ஏவியுள்ளதாகவும், குறித்த ஒவ்வொரு ஏவுகணைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஏவுகணை தயாரிப்புக்கான பொருட்களை ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து கொள்வனவு செய்ததாகக் குற்றஞ்சாட்டி, 6 வட கொரிய பிரஜைகள், ரஷ்ய பிரஜை ஒருவர் மற்றும் ரஷ்ய நிறுவனம் ஆகியோரை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்: கடும் கோபத்தில் ஈரான்

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல்...

அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும் இரத்து

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கிறிஸ்துமஸ்...

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷில்ஷேக்...