follow the truth

follow the truth

April, 14, 2025
Homeஉள்நாடுகொவிட் சிகிச்சை முறையில் மாற்றம் : புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொவிட் சிகிச்சை முறையில் மாற்றம் : புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Published on

நாடளாவிய ரீதியில், நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் நோயாளர்களை வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பு மேற்கொள்ள முன்னெடுத்த தீர்மானம் இன்று (09) முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் நோயாளர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் 19 நோயாளர்களை இவ்வாறு வீட்டில் வைத்து கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோய் நிலைமை ஏற்படுமாயின் அவர்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீட்டிலேயே வைத்து கண்காணிப்பதற்கு நோயாளர்களது அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த நடைமுறை மேல் மாகாணத்தில் இருந்த நிலையில், இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உச்சம் தொடும் தங்க விலைகள்

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235...

சோலார் உரிமையாளர்களிடம் மின்சார சபை மீண்டும் கோரிக்கை

கூரை மீது பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) சூரிய மின்சக்தி...

அனைவரின் உள்ளங்களிலும் செழிப்பின் ஒளி பிறக்கும் -எதிர்க்கட்சித்தலைவர்

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில்...