அரசியல் பிரமுகர்கள் சிலர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியுள்ள விடயம் தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதன் ஊடாக அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து காணப்படுவதாகவும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் அநாவசியமாக அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.