காணாமல் போயிருந்த கொடதெனியாவைச் சேர்ந்த இரு சிறுவர்களை மாகொல – மசவன தடுப்பு முகாமில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காணாமல்போன இரண்டு சிறுவர்களும் கடந்த 6 ஆம் திகதி மீரிகமவில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து இரு சிறுவர்களையும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.