இலங்கையர்களிடமுள்ள அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை ரூபாவாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை இம்மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் உப தலைவரான அனுர மத்தேகொட ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை நாணயச் சபை ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.