மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி. பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இன்று(10) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஏற்பட்டுள்ள நிலைமையைச் சீர்செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச் சக்தி அமைச்சர்கள் தெரிவித்தனர்.