follow the truth

follow the truth

January, 3, 2025
Homeஉள்நாடுகொழும்பு கடற்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள 03முதலைகள் : மக்களே அவதானம்

கொழும்பு கடற்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள 03முதலைகள் : மக்களே அவதானம்

Published on

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நேற்றைய தினம் காலி முகத்திடல் கடற்பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அது தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான முதலை தற்போது அங்கு இல்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும், தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை.

குறித்த முதலை 12 அடி நீளமுடையது என அவதானிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தையில் கண்டறியப்பட்ட முதலை 7 முதல் 8 அடி நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும், குறித்த முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி...

கொழும்பு வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்...