நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹவ, கெத்தபஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பன்னல பிரதேசத்தில் சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல், ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில் 88 வயதான பெண் ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.
மேலும், ஹுங்கம, படஹத பகுதியில் இனந்தெரியாத வாகனம் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.