follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாங்கள் மிகவும் நியாயமான அரசாங்கம் : மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில்...

நாங்கள் மிகவும் நியாயமான அரசாங்கம் : மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இல்லாதொழிக்க தயார் – பிரதமர்

Published on

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கிளால், தேர்தல் நெருங்குகின்றதா என்று சிலர் கேட்கின்றனர். தேர்தலை எதிர்பார்த்து நாங்கள் இந்த திட்டங்களை முன்னெடுக்கவில்லை. குடிநீரை பெற்றுக்கொடுக்கும் போது இங்குள்ள மக்களின் கட்சி என்ன என்று யாராவது கேட்டதுண்டா? சிலர் இன்று இவை அனைத்தையும் குழப்பிக் கொள்கின்றனர். மக்களுக்கு இக்கட்டான நிலையில் இருக்கும்போது நிவாரணப் பொதி கொடுத்தால் அதன்போதும் இவ்வாறே கேள்வி எழுப்புகின்றனர்.

நாம் மக்களின் சிரமங்களை புரிந்து கொண்ட அரசாங்கம். பொருட்களின் விலை உயரும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்தான் நிவாரணம் வழங்க முன்மொழிகிறோம்.

ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரும்பவில்லை. அதற்கும் ஏதோ சொல்கிறார்கள். நாம் வழங்குவதையும் விரும்புவதில்லை. பிடிக்காது. அவர்களும் கொடுப்பதில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

சரியாக கொவிட் தொற்றை நாம் கொண்டு வந்ததை போன்றே இவர்கள் பேசுகின்றனர். ஆனால் நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலமே மக்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்பது குறித்து எவரும் பேசுவதில்லை.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அறிந்தவுடன் நாம் அது குறித்து ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொண்டோம். ஆனால் முழு உலகையும் ஆட்கொண்ட கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை எம்மால் ஒரே இரவில் அகற்ற முடியாது.

இந்த நாட்டின் எதிர்காலத்தையும், உங்களது எதிர்காலத்தையும் வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கம். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை வெற்றியடைய செய்யுங்கள். அதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழையுங்கள். இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயார் என்பதை நம்பிக்கையுடன் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த இரண்டு ஆண்டுகள் இந்நாட்டின் மிகவும் கடினமான காலமாகும். இத்தகைய கடினமான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் இருக்கவில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே இந்த ஆண்டில் புதிய பயணத்தை தொடங்க உள்ளோம். இந்த ஆண்டு இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும், அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியையும், நமது சாதாரண மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பின் அழுத்தங்களையும் தணிக்கவும், அவர்கள் முயலும் வெற்றியை வழங்கவும் முடியும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

நாங்கள் மிகவும் நியாயமான அரசாங்கம். மத, இனப் பிரிவினையை விதைக்கும் அரசாங்கமாக நமது அரசாங்கம் எங்கும் செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையின் பின்னர் சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர், மலாய் என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட அழிவுகளுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை செயற்படுத்தி இந்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவரலாற்றில் இடம்பெறுவார். அவர் ஒரு பாரிய செயலைச் செய்தார்.

நாம் விரும்பாத போதிலும் பெட்ரோல் விலையை எமக்கு உயர்த்த வேண்டியிருந்தது என்பதை மக்கள் அறிவார்கள். விருப்பமின்றி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு முழு உலகிற்கும் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எனினும் ஜனவரி புத்தாண்டின்போது நாம் நிவாரணம் வழங்கினோம். அனைத்து அரச ஊழியர்கள் முதல் அப்பாவி சமுர்த்தி பயனாளர்கள் வரையும் மலையகத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பெருமக்களுக்கும் அந்த நிவாரணம் வழங்கியது மட்டுமன்றி, 50 ரூபாய்க்கு பெறப்பட்ட ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய் நட்டமடைந்தேனும் 75 ரூபாய் வரை அதிகரித்தது போன்ற பல்வேறு விடயங்களை நாம் முன்னெடுத்தோம்.

ஆனால் தற்போது தேர்தலை முன்னிட்டு இவை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிவாரணம் கொடுக்கும் வரை, நிவாரணம் எங்கே என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். நிவாரணம் வழங்கப்பட்டதன் பின்னர் பியகமவில் உள்ள தொழிற்சாலையில் இவை அச்சடிக்கப்பட்டுள்ளதாக சேரு பூசுகின்றனர். வழங்கும் வரையும் திட்டினர். தற்போது வழங்கிய பின்னரும் திட்டுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...